×

கே.பி.அன்பழகன் மயங்கியதால் பரபரப்பு

சென்னை: அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி அறையில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். தலைமைச்செயலக மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.அன்பழகன் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

The post கே.பி.அன்பழகன் மயங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : KP Anbazhagan ,CHENNAI ,AIADMK ,Legislative Assembly ,Edappadi Palaniswami ,Palakode ,KP Anpahagan ,Chief Secretariat ,K.P.Anpahagan ,
× RELATED சட்டப்பேரவை வளாகத்தில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!!