×

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை: சட்டசபையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கையில் பாமக எம்எல்ஏ வெங்கடேசன் பேசினார். தொகுதி சார்ந்த பல விஷயங்களை பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக பேச முயன்றார். ஆனால் அவருக்கான நேரம் முடிந்து விட்டதால் அவர் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை. இதைத்தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். பின்னர் பேரவை வளாகத்தில் பாமக எம்.எல்.ஏ. வெங்கடேசன் அளித்த பேட்டியில், ‘‘மக்கள் பிரச்னை குறித்து பேச அதிக நேரம் தருவதில்லை. ராமதாஸ் இடைத்தேர்தலுக்காக இட ஒதுக்கீடு குறித்து பேசுவது போல் போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகிறார். ராமதாஸ் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்’’ என்றார்.

The post பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : BMC MLAs ,CHENNAI ,BAMAKA ,MLA ,Venkatesan ,Dinakaran ,
× RELATED விஷசாராய விவகாரம் தொடர்பான வழக்கு நாளை ஒத்திவைப்பு..!!