×

ஆன்லைன் விளையாட்டில் ரூ7 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை


தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வடதாரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (32), ஆன்லைன் விளையாட்டில் ₹7 லட்சம் வரை கடன் வாங்கி கட்டி இழந்தார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், நண்பர் விஜய பிரபாகரை தொடர்பு கொண்டு அரளி விதையை சாப்பிட்டு விட்டேன். குடும்பத்திலும் பிரச்னையாக உள்ளது எனக்கூறி தனது இடத்தை கூகுள் மேப்பில் அனுப்பியுள்ளார். மேப்பில் காட்டிய சோமனூத்து பகுதியில் மயக்க நிலையில் கிடந்த பிரகாஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்

The post ஆன்லைன் விளையாட்டில் ரூ7 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Prakash ,Tharapuram Vadaharai Kamarajapuram ,Tirupur district ,Vijaya Prabhakar ,
× RELATED நகை, பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் நகை கடையை வேவு பார்த்தவர் கைது