×

வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும் வனத்துறையினர் ‘ரேஞ்சருக்கு தான் லஞ்சமா, நாங்க ஸ்குவாட் எங்களுக்கும் கொடுங்க…’: வீடியோ வைரல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டி கடத்தி சென்றதாக ஒரு நபரிடம் வாகனத்தில் அமர்ந்தபடி வனத்துறையினர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக தலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வரும் உரையாடல் வருமாறு:
வனத்துறையினர்: நாங்க ஸ்குவாட்.
நபர்: எனக்கு தெரியாது உண்மையிலே, ரேஞ்சர்களுக்கு எல்லாம் மாமூல் கொடுத்து இருக்கிறோம்.
வனத்துறையினர்: நாங்க ஸ்குவாட். ரேஞ்சருக்கு போன் பண்ணவா.. நாங்க எப்பனா ஒரு டைம் தான் வருவோம். உன் பெயர் என்ன?
அந்த நபர்: பாஸ்கர்

வனத்துறையினர்: நிம்மியம்பட்டு பாஸ்கரா, உன்னை தெரியுமா ரேஞ்சருக்கு.
பாஸ்கர்: கேளுங்க அது போயி என்ன இருக்கு
வனத்துறையினர்: என்ன வேப்பன், புங்கன் எவ்வளவு கட்டி மரம் ஓட்டுற.
பாஸ்கர்: ₹2,000, ரேஞ்சருக்கு ₹1,500, பாரஸ்ட் ஆபிசருக்கு ₹500
வனத்துறையினர்: ஸ்குவாட்டுக்கும் கட்டிடு.

பாஸ்கர்: கட்டிட்டுதான் இருக்கோம் சார்
வனத்துறையினர்: மாசம் எப்பனா ஒரு டைம் தான் வருவோம். உன் நம்பர் சொல்லு
பாஸ்கர்: போட்டுக்கங்க சார் (செல்போன் எண்ணை தந்தார்.)
வனத்துறையினர்: எப்பனா ஒரு டைம் தான் வருவோம், வரும்போது கால் பண்றோம்.
பாஸ்கர்: சரி… நீங்க எந்த ஊரு சார்
வனத்துறையினர்: வேலூர் ஸ்க்வாடு.. இத்துடன் வீடியோ முடிவடைகிறது.

The post வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும் வனத்துறையினர் ‘ரேஞ்சருக்கு தான் லஞ்சமா, நாங்க ஸ்குவாட் எங்களுக்கும் கொடுங்க…’: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Forest department ,Tirupattur ,Vaniyambadi forest ,Tirupattur district ,
× RELATED யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர்...