×

ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய ஒரே ஒருவரான வருண்சிங் மறைவு ஆழ்மனதை நெருடுகிறது: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!!

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் காலமானார். நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத், அவரது மனைவி, உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் காயத்துடன் மீட்கப்பட்டார். இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங், பலனின்றி இறந்ததாக விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. குன்னூரில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார். இதன் மூலம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரும் மரணமடைந்துள்ளனர். குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி:குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், நாட்டிற்கு கேப்டன் வருண் சிங் ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது. வருண் சிங் நாட்டிற்கு பெருமையுடனும், வீரத்துடனும் சேவை ஆற்றியுள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார். குரூப் கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல் என ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்:குரூப் கேப்டன் வருண் சிங் உயிருக்குப் போராடி இறுதி மூச்சு விட்டதை அறிந்து வருத்தம் அளிக்கிறது. ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயம் அடைந்தாலும், வீரம் மற்றும் அடங்காத தைரியம் ஆகியவற்றின் சிப்பாய் மனதை வெளிப்படுத்தினார். அவருக்கு தேசம் நன்றி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டிருக்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமுற்று உயிரிழந்த வருண் சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய ஒரே ஒருவரான வருண்சிங் மறைவு ஆழ்மனதை நெருடுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய கேப்டன் வருண் மறைவு செய்தி கேட்டு மிகவும் கலங்கினேன். வருண் வீரம், அர்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும், அவர் நம் மனதில் என்றென்றும் வாழ்வார் என தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்:குரூப் கேப்டன் வருண்சிங் மறைவு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழிசை சவுந்தரராஜன்:ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்த வருண் சிங் மறைவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ரங்கல் தெரிவித்துள்ளார். வருண் சிங் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழிசை குறிப்பிட்டிருக்கிறார். …

The post ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய ஒரே ஒருவரான வருண்சிங் மறைவு ஆழ்மனதை நெருடுகிறது: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Varnsingh ,PM Modi ,MJ G.K. ,Stalin ,Delhi ,Varun Singh ,Gunnur ,Nilgiri district ,Varansingh ,B.M. ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...