×

ரூ.100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டிடங்கள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பதிவுத்துறைக்கு ரூ.100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
* வணிகவரித்துறை அலுவலகங்களில் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* கடலூரில் ரூ.23 கோடியில், திருவள்ளூரில் ரூ.22 கோடியில், சேலம் நுண்ணறிவு கோட்டத்திற்கு ரூ.9.84 கோடியில் புதிய கட்டிங்கள் கட்டப்படும்.
* சேலம் கோட்டத்திற்குட்பட்ட 3 வரிவிதிப்பு வட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம் ரூ.6 கோடியில் கட்டப்படும்.
* காஞ்சிபுரத்தில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம் ரூ.4.20 கோடி செலவில் கட்டப்படும்.
* பதிவுத்துறைக்கு ரூ.100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.
* பணிப்பளு மிகுந்த சார்பதிவாளர் அலுவலகங்களை பிரித்து புதியதாக 7 சார்-பதிவாளர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும்.
* பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கென கம்பி இணையற்ற இணைப்பு ஏற்படுத்தப்படும்.
* சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரம்பரிய கட்டிடத்தில் பதிவுத்துறைக்கு நவீன கூட்ட அரங்கம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டிடங்கள்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Murthy ,Legislative Assembly ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...