- சிற்பம் ஹால்
- மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
- சென்னை
- நிதி அமைச்சர்
- தங்கம் தென்னராசு
- தொல்பொருளியல் திணைக்களம்
- மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
சென்னை: சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கைகள் விவாதம் முடிந்ததும், தொல்லியல் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
* தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளை படித்து நூலாக வெளிக்கொணரும் சிறப்பு திட்டம் ரூ.3.50 கோடியில் மேற்கொள்ளப்படும். புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களை மேம்படுத்தி உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் புதியதாக மின்னொளியுடன் கூடிய சிற்பக்காட்சி கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.2.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோரா நினைவு சின்னத்தில் உள்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின் விளக்குகள் ரூ.2.75 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
* தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியினை ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
* தொல்லியல் துறையின் அகழ்வைப்பகங்களுக்கான மேம்பாட்டு நிதியினை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தொல்லியல் துறையின் 20 சார் அலுவலகங்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு மடிக்கணினி கேமரா மற்றும் உபகரணங்கள் ரூ.50 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்படும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
The post மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் ரூ.2.80 கோடியில் சிற்பக்காட்சி கூடம் appeared first on Dinakaran.