×

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் பேச்சு: இந்தியா கண்டனம்


ஐநா: ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் காஷ்மீர் பற்றி பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்னை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த கண்டனம் கொடுத்து வந்தாலும் பாகிஸ்தான் தன் போக்கை மாற்றி கொள்ளவில்லை. அதன்ஒரு பகுதியாக அண்மையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தானுக்கான ஐநா தூதர் முனீர் அக்ரம் காஷ்மீர் பிரச்னை பற்றி கருத்து தெரிவித்தார். பாகிஸ்தானின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் பிரதீக் மாத்தூர் கூறியதாவது, “ஐநாவின் பல்வேறு கூட்டங்களில் விவாதிக்கப்படும் பொருள் அல்லது மன்றத்தின் கருப்பொருளை பற்றி கவலைப்படாமல், காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி வருவது கண்டனத்துக்குரியது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

The post ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் பேச்சு: இந்தியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Kashmir ,UN ,Security Council ,India ,UN Security Council ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்