×

ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்: இஸ்ரேல் துறைமுகத்திலும் டிரோன் தாக்குதல்


துபாய்: ஏடன் வளைகுடாவில் ஹவுதி அமைப்பினர் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோன்று இஸ்ரேலின் எலியாட் நகரிலும் ஈராக் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடந்து வருகின்றது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த கோரி கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சரக்கு கப்பல்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. ஏடன் வளைகுடாவில் 8 மாதங்களாக கண்காணிப்பு பணியில் இருந்த அமெரிக்காவின் டிவைட் ஐசன்ஹோவர் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் வெளியேறியதை அடுத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சரக்கு கப்பல் மீது ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பலில் இருந்த ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். இதனிடையே இஸ்ரேலிய துறைமுக நகரமான இலாட் மீது டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. டிரோனை கண்காணித்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பிராந்தியத்திற்குள் நுழைவதற்குள் அதனை மறித்து வீழ்த்தினார்கள்.

The post ஏடன் வளைகுடாவில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்: இஸ்ரேல் துறைமுகத்திலும் டிரோன் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Houthis ,Gulf of Aden ,Dubai ,Houthi ,Israel ,Eliot ,Hamas ,Israel… ,Gulf ,of Aden ,Dinakaran ,
× RELATED ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல் மீது ஹவுதி தாக்குதல்