×

புதுக்கோட்டை தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ராமசாமிபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் கடந்த 24ம் தேதி கலசம் தவறிவிழுந்து தேர் ஒருபுறமாகச் சாய்ந்ததால் எதிர்பாராதவிதமாக கீழே தவறிவிழுந்த விபத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Chief Minister ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Arulmiku Muthumariyamman temple ,Ramasamypuram ,Pudukottai district ,
× RELATED புதுக்கோட்டையில் வடிகால் வாய்க்கால் தூய்மை செய்யும் பணி