×

காலாவதி டோல்கேட்களை உடனடியாக மூட வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்


திருவாரூர்: காலாவதி டோல்கேட்களை மூட வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று அளித்த பேட்டி: வணிக வரித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்களிக்க வேண்டும்.

வணிகர்களை பாதுகாப்பதற்காக சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். வங்கியில் போடும் பணத்துக்கு கணக்கில்லாமல் பிடித்தம் செய்து வருகின்றனர். இதன் விபரங்களை வெளிப்படை தன்மையுடன் வெளியிட வேண்டும். டோல்கேட் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். காலாவதியான டோல்கேட்களை உடனடியாக மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காலாவதி டோல்கேட்களை உடனடியாக மூட வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,Thiruvarur ,Federation of Tamil Nadu Merchants Association ,State ,President ,Tiruvarur ,Union ,Finance Minister ,Dinakaran ,
× RELATED வணிக உரிமம் புதுப்பித்தலுக்கு...