×

விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து குடிக்கும் வசதி: ஐதராபாத்தில் குடிமகன்கள் குஷி


திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபான கூடங்களில் டேப் ரூம் என்ற பெயரில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதுபான கூடங்களில் நண்பர்கள், தோழிகள் என யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த டேப் ரூம், மதுபான கூடத்தில் பீர் பிரியர்களுக்கு புது அனுபவத்தை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் அருகே பல்வேறு வடிவங்களில் டம்ளர்களையும் அடுக்கி வைத்துள்ளனர். இந்த டம்ளர்களை எடுத்து விரும்பிய குழாய்களைத் திறந்தால் பீர் கொட்டுகிறது. அதனை அப்படியே பிடித்து குடிக்கலாம். இதில் கோதுமை, ஜேம்ஸ் ப்ளாண்ட், அங்கிள் டங்கிள் உள்ளிட்ட உயர் ரக பீர் வகைகள் கூட குழாய்களில் வருகின்றன. எந்த குழாயில் எந்த வகையான பீர் வரும் என்ற பெயர் குழாய்களுக்கு மேலே அச்சிடப்பட்டுள்ளதால் பீர் பிரியர்கள் தங்களுக்கு வேண்டியதை பிடித்து குடிக்கலாம்.

இதிலும் தனித்துவம் என்னவென்றால் இந்த குழாய்களில் வரும் பீர் ஆலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உடனே மதுபான கடைக்கு கொண்டுவரப்பட்டு அப்படியே குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் தயாரிக்கப்பட்ட உடனே பீர் குடிக்கும் புது அனுபவம் கிடைக்கிறது. இந்த சரக்கில் தான் கிக் அதிகம்’ என மது பிரியர்கள் நினைக்கிறார்கள். இதனால் மது பிரியர்களின் இந்த தீராத குறையை தீர்க்க ஐதராபாத்தில் குழாய்களில் பிடித்து பீர் குடிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளதை அறிந்த குடிமகன்கள் அங்கு திரண்டு வருகின்றனர். பல்வேறு விதமான பீர்களை அவர்களே பிடித்து ருசித்து மகிழ்கின்றனர். இந்த புதிய திட்டத்தால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து குடிக்கும் வசதி: ஐதராபாத்தில் குடிமகன்கள் குஷி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Thirumalai ,Jubilee Hills ,Hyderabad, Telangana ,Dinakaran ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...