×

நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நியோ மேக்ஸ் மோசடி வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நியோமேக்ஸ் பிரபர்ட்டீஸ் லிமிடெட் இயக்குநர்கள் பெற்ற ஜாமினை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க போதிய ஆட்கள் இல்லை என வழக்கம்போல் சிபிஐ தரப்பில் கூறுவீர்களே என நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆவணங்கள் பறிமுதல், சொத்துகள் முடக்கம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Branch ,High Court ,Neomax financial ,Madurai ,Neo Max ,CBI ,Neomax Properties Limited ,Neomax ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு