×

தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில் சீறிப் பாய்ந்த சிறுத்தை: வைரலாகும் வீடியோ

சத்தியமங்கலம்: தமிழக- கர்நாடக மலைப்பாதையை கடந்து சிறுத்தை பாய்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சமீபத்தில் புலி,சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்கிறது.

இந்த நிலையில், சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதை 17வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று பகல் நேரத்தில் ஒரு சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையோர தடுப்புக்கம்பி மீது ஏறி தாவி குதித்து தார்ச்சாலையை கடந்து சென்றது. சிறுத்தை சாலையை கடந்து செல்வதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில் சீறிப் பாய்ந்த சிறுத்தை: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Karnataka ,Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve Forest ,Tamilnadu-Karnataka ,
× RELATED சத்தியமங்கலம் முகமதியர்...