×

ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்

பெங்களூரு: ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு பெங்களூரு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. ஹோலநரசிபூர் காவல்நிலையத்தில் பதிவான வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு தள்ளுபடி செய்தது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இதில் குற்றத்தின் தீவிரத்தை கருதி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அவருடைய வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உட்பட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வழக்கும், மைசூர் கே.ஆர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையம் ஒரு வழக்கும் என மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் குறித்து கர்நாடக அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை உருவாக்கி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா ஒரு மாதம் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒவ்வொரு வழக்கிலும் மூன்று முறை போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் பதிவான வழக்கிலிருந்து ஜாமீன் வேண்டுமென நேற்று மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டது. இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஜமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மூன்று வழக்குகள் இருக்கும் சூழ்நிலையில் நேற்று புதிதாக ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க நேரிடும். விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணங்களை காட்டி ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிபதி முன்பு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருதி பிரஜ்வல் ரேவண்ணா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Prajwal Revanna ,Jamin ,Bangalore court ,Holnarasipur ,Police Station ,B. Prajwal ,Revna ,
× RELATED பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல்...