×

ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து

டெல்லி: எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கூறியது போல ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். தொடர்ந்து ஓம் பிர்லாவை வாழ்த்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தி பேசுகையில், இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இண்டியா கூட்டணி சார்பில் எனது வாழ்த்துக்கள்.

அரசாங்கத்திடம் அரசியல் அதிகாரம் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளும் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடந்த முறை இருந்ததை விட இந்திய மக்களின் குரலை இம்முறை எதிர்க்கட்சிகள் அதிகமாகவே பிரதிபலிக்கின்றன. உங்களின் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதற்கேற்ப இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.

அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கூறியது போல ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்ட பிறகே ஒருமித்த கருத்துக்கு வரமுடியும். எந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி மட்டுமே முடிவு செய்ய முடியாது. 2024-க்கு பிறகு உருவாகி உள்ள நாடாளுமன்றம் வேறு என்பதை ஆளுங்கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கோகோய் கூறியுள்ளார்.

 

 

The post ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து appeared first on Dinakaran.

Tags : Congress ,Gaurav Gogoi ,Delhi ,Om Birla ,Lok Sabha ,Speaker ,Modi ,Opposition ,Rahul ,
× RELATED இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை...