×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தலைமைச்செயலகம் வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: விதி எண் 56ன் படி அவையை ஒத்திவைத்து விவாதிக்க தீர்மானம் கொடுத்தோம். விதியின் படி அதிமுக நடந்து கொண்டால் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் சொன்னார் ஆனால் இன்று விதிப்படி சபாநாயகர் நடக்கவில்லை. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையின் ஆழத்தை கருதி விவாதிக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சனையை விட மிக்கியமான பிரச்சனை வேற என்ன இருக்கிறது ?.

திமுக இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வருவதற்கு காரணம் ஓட்டு அரசியல். விக்கிரவாண்டி தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 5 மானிய கோரிக்கை என்று சம்பிரதாயத்திற்கு பேரவையை நடத்துகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள அதிமுக அரசாங்கம் ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைத்தது.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Edappadi Palaniswami ,Chennai ,House ,AIADMK ,
× RELATED எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்