×

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி

டெல்லி: தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து முகநூலில் முதல்வர் வெளியிட்ட பதிவில், புதிய பதவிக்குத் தோ்வாகியுள்ள எனது சகோதரா் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது.

மக்களவையில் அவரது குரல் தொடா்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று வாழ்த்தி இருந்தார். இத்தகைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, நன்றி எனது அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம். இவ்வாறு ராகுல்காந்தி எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

The post தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA K. Rakulganti ,Stalin ,Delhi ,India ,Parliament ,Chief Minister ,MLA ,K. Rakulganti ,Senior ,Congress ,Rahul Gandhi ,People's Opposition ,Mu K. Rakulganti ,
× RELATED பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு,...