×

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது உறவினருக்கு அபராதம்

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது உறவினர் மகேஷுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 583 நாட்களுக்கும் மேலாக எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால் மகேஷ் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பான பிரச்சனையில் ஜெயக்குமார் தலையிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடன்கிர்த்துள்ளார்.

The post நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது உறவினருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Ex ,minister ,Jayakumar ,Chennai ,Chennai High Court ,Mahesh ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் பணம், பைக் திருட்டு