×

விடுதியில் தூக்கிட்டு எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

திருவனந்தபுரம்: விடுதியில் தூக்கிட்டு எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை செய்தார். கேரள மாநிலம் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் விஷ்ணு என்ற மாணவர் 2வது ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் அவரது அறையில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் சாப்பிட சென்றனர்.

அப்போது விஷ்ணு மட்டும்அறையில் இருந்தார். மற்ற மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது விஷ்ணு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடியதால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலக்காடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post விடுதியில் தூக்கிட்டு எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : MBBS ,Thiruvananthapuram ,Vishnu ,Palakkad Government Medical College ,Kerala ,
× RELATED 300 முறை தோப்புக்கரணம் போட வைத்து...