×

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர்கள் 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ.சி கல்லூரியில் 4,000 அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரிலும் தனியே கட்டணம் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதனை கண்டித்தும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கதில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் நேற்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்றும் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மாணவ சங்கத்தினர், இல்லாவிட்டால் மாவட்ட முழுவதும் உள்ள கல்லூரிகளில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

 

The post தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : SFI ,VUC College ,Tuticorin ,Thoothukudi ,Tuticorin VUC College ,Manonmaniam Sundaranar University ,
× RELATED தூத்துக்குடி: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு