×

வேடன்சந்தூர் அருகே திருடிய இருசக்கர வாகனத்தில் மணக் கோலத்தில் சென்ற இளைஞர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடன்சந்தூர் அருகே காதல் திருமணம் முடித்த இளைஞர் தாம் திருடிய இருசக்கர வாகனத்தில் மணக்கோலத்தில் சென்றபோது கைது செய்யப்பட்டார். வேடசந்தூர் அருகே வடமதுரையை சேர்ந்த வசந்த் என்பவர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட அவர்கள் பாதுகாப்பு கேட்பதற்காக வடமதுரை காவல் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். வேகமாக வந்த கார் ஒன்று அவர்களை வழிமறித்து நின்றபோது பெண் வீட்டார் என்று அஞ்சிய மணமகன் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காரில் வந்தவர்கள் தாங்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் என்றும் வேறு ஒரு வழக்கில் வசந்த்தை கைது செய்வதாகவும் தெரிவித்தனர். சினிமா பணியில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதுநகரில் இருந்து வசந்த் இரு சக்கர வாகனத்தை திருடி வந்ததாகவும் அவரை தேடி வந்த போது அதே பைக்கில் மனைவியுடன் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மணப்பெண்ணை அவரது பெற்றோர் நேரில் வந்து அழைத்து சென்றனர்.

The post வேடன்சந்தூர் அருகே திருடிய இருசக்கர வாகனத்தில் மணக் கோலத்தில் சென்ற இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Manak Kolam ,Vedansandur ,Dindigul ,Dindigul district ,Manakolam ,Vasanth ,Vadamadurai ,Vedasandur ,Udumalaipet ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...