×

கார் மோதி இறந்த குரங்குக்கு இறுதி சடங்கு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே மின்னூரில் கார் மோதி குரங்கு ஒன்று இறந்த நிலையில் அப்பகுதியினர் சோகத்துடன் இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். ஆம்பூர் அடுத்த மின்னூரில் கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று சுற்றி திரிந்து வந்தது. இந்த குரங்கிற்கு அப்பகுதியினர் உணவு அளித்தும் நீர் கொடுத்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சாலையை அந்த குரங்கு கடக்க முயன்றது.

அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த ஒரு கார் இந்த குரங்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த குரங்கு சம்பவ இடத்திலேய உயிரிழந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியினர் அந்த இடத்தில் இறந்து கிடந்த குரங்கின் சடலத்திற்கு மலர் மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர். கிராம மக்களின் இந்த மனிதநேய செயலுக்கு பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post கார் மோதி இறந்த குரங்குக்கு இறுதி சடங்கு appeared first on Dinakaran.

Tags : Ambur ,Minnoor ,
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது