×

பல்லாவரம் வட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பது பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க கலெக்டர் அறிவிப்பு

பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளச் சாராயம் விற்பதோ அல்லது பதுக்கி வைப்பது போன்ற தகவல் தெரிந்தால் உடனடியாக வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல் தெரிவிக்குமாறு விழிப்புணர்வு பதாகைகளை தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை 10581 என்ற எண்ணிலும், 18004257088 என்ற மாவட்ட தொலைபேசி எண்ணிலும், 9042781756 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

The post பல்லாவரம் வட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பது பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Tahsildar Arumugam ,Tamil Nadu State Control ,Dinakaran ,
× RELATED காரியம் ஆக வேண்டும் என்றால்...