×

நெல்லை அருகே உகந்தாம்பட்டி விலக்கில் பைக் மீது மினி லாரி மோதி கார் டிரைவர் பலி

*நண்பர் படுகாயம்

ஆலங்குளம் : நெல்லை அருகே உகந்தாம்பட்டி விலக்கில் பைக் மீது மினிலாரி மோதியதில் கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை மேல பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இஸ்மாயிலின் மகன் முகமது மைதீன் (24). கார் டிரைவரான இவர், நேற்று காலை அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பரும், அப்துல்காதர் என்பவரின் மகனுமான பரூக்கை (20) அழைத்துக்கொண்டு பைக்கில் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் இருவரும் அதே பைக்கில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை முகமது மைதீன் ஓட்டினார். நெல்லை அடுத்த சீதபற்பநல்லூர் சமத்துவபுரம் மேல்புறம் சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த மினி லாரியை முகமது மைதீன் முந்தி செல்ல முயன்றார். இதையடுத்து உகந்தாம்பட்டி விலக்கு பகுதியில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பைக் மீது மினிலாரி மோதியதில் மினிலாரியின் சக்கரத்தில் பைக் சிக்கிக்கொண்டு விபத்துக்கு உள்ளனது. இதில் படுகாயமடைந்த முகமது மைதீன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பரூக் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த சீதபற்பநல்லூர் எஸ்ஐ பால், ஏட்டுக்கள் கலை அரசன், அய்யப்பன், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார், படுகாயமடைந்த பரூக்கை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் விபத்தில் இறந்த முகமது மைதீனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மினிலாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை அருகே உகந்தாம்பட்டி விலக்கில் பைக் மீது மினி லாரி மோதி கார் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Opkanthampatti ,Nella ,Padukayam Alankulam ,Ugandampatti ,Tenkasi District ,Senkot Upper Schoolgate Street ,Nellu ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...