×

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு..!!

டெல்லி: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். ராஜ்நாத் சிங், லல்லன்சிங், அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஓம் பிர்லா பெயரை வழிமொழிந்தனர். பிரதமர் மோடி முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக இடைக்கால சபாநாயகர் அறிவித்த நிலையில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Om Birla ,Speaker of the People ,Delhi ,Speaker of ,Lok Sabha ,PM Modi ,Rajnath Singh ,Lallansing ,Amit Shah ,Pa. ,J. K. ,
× RELATED மக்களவை துணை சபாநாயகர் பதவி...