×

கோவையில் தொடர் மழை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3அடி உயர்வு

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் சிறுவாணி அணை அமைத்துள்ளது. கோவை மக்களின் முக்கிய நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நேற்று வழக்கத்தை விட 120 மி.மீ. கூடுதலாக மழை பெய்தது. இதையடுத்து அணையின் நீர்மட்ட வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 45 அடியாக உள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 11.32 அடியில் இருந்து 14.53 அடியாக அதிகரித்துள்ளது. இது நேற்று முன்தினத்தை காட்டிலும் 3 அடி உயர்ந்துள்ளது. எஞ்சிய காலங்களிலும் இதுபோன்ற தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரையறுக்கப்பட்ட கொள்ளளவில் இருந்து நீர்மட்ட உயரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்திருப்பது கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கோவையில் தொடர் மழை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Siruvani ,Siruvani dam ,Western Ghats ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED கோவை நீர் பிடிப்பு பகுதிகளில்...