×

சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி நடத்த வேண்டும்: சரத்பவார் பேச்சு

டெல்லி: சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி நடத்த ஒப்புக்கொள்கிறோம். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன் என தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சபாநாயகர் தேர்தல் குறித்துசரத்பவார் கூறியதாவது:-
பாரம்பரியமாக சபாநாயகர் பதவி ஆளும் கட்சிக்கும், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கும் சென்றது. ஆனால் நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் இது நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பாஜக அல்லாத தலைவர்கள் என் கருத்தை கேட்டனர். சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி நடத்த ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்நான் வலியுறுத்தினேன் என அவர் கூறினார்.

The post சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி நடத்த வேண்டும்: சரத்பவார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sarathabawar ,Delhi ,Nationalist Congress ,Saratchandra Bhawar Party ,Sarathbhawar ,Indian Parliament ,Saratbawar ,
× RELATED மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் 19...