×

முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு: அரசுத் தேர்வுகள் துறை தகவல்

சென்னை: முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21-ம் தேதி நடைபெறவுள்ள திறனாய்வுத் தேர்வுக்கு, அரசுப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக ஜூன் 21-26 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்:
21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின்திறனாய்வுத் தேர்விற்கு” விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இக்கால அவகாசம் 03.07.2024 வரை நீட்டிக்கப்படுகிறது. என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

The post முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு: அரசுத் தேர்வுகள் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : State Examinations Department ,Chennai ,State Examination Department ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...