×

வேதாரண்யம் தாலுகா தாமரைப்புலம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு

 

வேதாரண்யம்,ஜூன் 26: வேதாரண்யம் தாலுகா தாமரைப்புலம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கை எம்பி செல்வராஜ் இயக்கி வைத்தார். வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் தாமரைப்புலம் ஊராட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இரண்டு உயர்மின் கோபுர விளக்குகள் வழங்கப்பட்டன. இந்த உயர் கோபுர விளக்குகள் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், உயர் மின்விளக்கு இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், தாமரைப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா பாலசுந்தரம், திமுக மாவட்ட பிரதிநிதி மச்சழகன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, கிளை கழகச் செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் தாலுகா தாமரைப்புலம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam Taluka Lotus Field ,Uradachi ,Selvaraj ,Vedaranyam Taluga ,Uratchi ,Dinakaran ,
× RELATED மறுகால்நீர் செல்லும் பாதை...