×

திருமருகல் அருகே புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

 

நாகப்பட்டினம், ஜூன் 26: திருமருகல் அருகே சீயாத்தமங்கை மெயின்ரோடு பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ஒரு மூட்டையில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பெருநாட்டான்தோப்பு கீழத்தெருவை சேர்ந்த கேசவன்(53). என்பதும், காரைக்காலில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் கேசவனை கைது செய்து 110 லிட்டர் சாராயத்தையும், இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர் போராட்டம் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூறுகையில்:-

மீன் வளத்துறை அதிகாரிகள் 10 தினங்களுக்குள் தடை செய்யப்பட்ட வலை மற்றும் படகுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருமருகல் அருகே புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Thirumarukal ,Nagapattinam ,Chetatcherry ,Seethamangai Main Road ,Tirumarukal ,
× RELATED கைம்பெண்களை மரியாதையின்றி நடத்துவதை...