×

பாடாலூரில் ஆசிரியர்கள் 100 பேருக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

 

பாடாலூர், ஜூன் 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் 2024-25 கல்வி ஆண்டிற்கான 1 முதல் 3ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயி ற்சி முகாம் பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜா தொடங்கி வைத்தார்.

வட்டார கல்வி அலுவலர்கள் விஜயா, சின்னசாமி, மூத்த விரிவுரையாளர்கள் பழனிசாமி, ஸ்ரீரங்கநாயகி முன்னிலை வகித்தனர். பயிற்சியினை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பெரம்பலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பயிற்சியில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 ஆசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

The post பாடாலூரில் ஆசிரியர்கள் 100 பேருக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Padalur ,Alatur ,Perambalur ,
× RELATED ஆலத்தூரில் 3வது நாளாக ஜமாபந்தி