×

சங்கடஹர சதுர்த்தி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

 

பெரம்பலூர் ஜூன் 26: பெரம்பலூர் நகரிலுள்ள எடத்தெரு ஸ்ரீமகா மாரியம் மன் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் வல்லப விநாயகருக்கு சங்கட சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 7 மணி அள வில் பால்,தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணி அள வில் மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பூஜைகளை குமார் மற்றும் ராஜேஷ் பூசாரியார் செய்து வைத்தனர். விழாவில் முன் னாள் அறங்காவலர் வைத் தீஸ்வரன், காரியக்காரர் பழனியப்பன் மற்றும் பெரம்பலூர், அரணாரை துறைமங்கலம், விளாமுத் தூர், எளம்பலூர், நெடு வாசல், சிறுவாச்சூர் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற்றுச் சென்றனர்.

The post சங்கடஹர சதுர்த்தி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Sangadahara Chaturthi Sri Maha Mariamman temple ,Lord Vinayaka ,Perambalur ,Sangada Chaturthi festival ,Vallabha Vinayaka ,Edattheru Srimaha Mariamman temple ,Vinayaka ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...