×

போதை பொருட்கள் தடுப்பு: மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர், ஜூன் 26: திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு அவைகள் பறிமுதல் செய்யப்படுகிறத. மேலும், சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சுகாதார துறையினர் மூலம் பூட்டி சீல் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே இயங்கி வரும் கடைகள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை இளைஞர்கள் முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழகத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.

மேலும் குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். இதேபோல போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். போலீசார் மூலம் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post போதை பொருட்கள் தடுப்பு: மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,SP ,Jayakumar ,Tiruvarur district ,Panmasala ,
× RELATED எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்ற 22 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு