×

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஜூலை 2 முதல் கடன் வழங்கும் முகாம்: 15ம் தேதி வரை நடைபெறும்

 

விருதுநகர், ஜூன் 26: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் ஜூலை 2 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த தனிநபர்கள், குழுக்கள், சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய பொது காலக்கடன், பெண்களுக்கு புதிய பொற்கால கடன், நுண்கடன், கறவை மாடு கடன் உள்ளிட்ட கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். 2024-25ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் முகாம்கள் வட்ட அளவில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

ஜூலை 2ல் விருதுநகர், ஜூலை 3ல் காரியாபட்டி, ஜூலை 4ல் அருப்புக்கோட்டை, ஜூலை 5ல் திருச்சுழி, ஜூலை 8ல் சிவகாசி, ஜூலை 9ல் ராஜபாளையம், ஜூலை 10ல் திருவில்லிபுத்தூர், ஜூலை 11ல் சாத்தூர், ஜூலை 12ல் வெம்பக்கோட்டை, ஜூலை 15ல் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. கடன் தேவைப்படுவோர் கடன் தொகை பெற ஆவணங்களுடன் நேரில் கலந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஜூலை 2 முதல் கடன் வழங்கும் முகாம்: 15ம் தேதி வரை நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில...