×

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஜூன் 26: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஈஸ்வரி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியப்பெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Tamil Nadu Government Employees Association ,Theni District Collector ,Thangameena ,District Secretary ,Murugan ,Dinakaran ,
× RELATED திருநங்கைகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது