×

மாணவர்களுக்கு பாராட்டு விழா

காரைக்குடி, ஜூன் 26:காரைக்குடி அருகே இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி வரவேற்றார். சாக்கோட்டை ஒன்றியக்குழு முன்னாள் பெருந்தலைவர் சுப.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

இலுப்பைக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசு, முன்னாள் துணைத்தலைவர் ரகுபதி, முன்னாள் தலைமையாசிரியர் சண்முகநாதன், ஆசிரியர் சொக்கலிங்கம், ஓ.சிறுவயல் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் லெமாயூ உள்பட பலர் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற வைஷாலி, 2ம் இடம் பெற்ற லியோதரன், 3மிடம் பெற்ற மனோபாலன், 4ம் இடம் பெற்ற ஞானசபரிஷ், 5ம் இடம் பெற்ற கவுதம் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர் முனீஸ்வரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

The post மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Iluppaikudi Government High School ,Ishwari ,Chakkottai Union Committee ,Former ,President ,Appreciation Ceremony for ,Dinakaran ,
× RELATED அழகப்பா பல்கலை. கிரிக்கெட்டில் வெற்றி...