×

கவிஞர் முடியரசனுக்கு சிலை முதல்வருக்கு எம்எல்ஏ மாங்குடி நன்றி

 

காரைக்குடி, ஜூன் 26: காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி தெரிவித்துள்ளதாவது: வீறுகவியரசர் முடியரசனின் புகழை போற்றும் வகையில் ரூ.50 லட்சத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்து பேசியிருந்தேன். அதன் அடிப்படையில் காரைக்குடியில் முடியரசனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான இடம் மற்றும் வரைபடம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே முடியரசன் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடக்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

The post கவிஞர் முடியரசனுக்கு சிலை முதல்வருக்கு எம்எல்ஏ மாங்குடி நன்றி appeared first on Dinakaran.

Tags : MLA ,Mangudi ,Chief Minister ,Munirarasan ,Karaikudi ,MLA Mangudi ,Thiruvuruva ,M. K. Stalin ,Minister ,M. P. Saminathan ,Minister for Cooperatives ,K. Periyagaruppan ,Munirasana ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு...