×

சாலையின் நடுவே இடையூறாக மின் கம்பம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 26: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருப்பாலைக்குடி, பழங்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருப்பாலைக்குடி பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் ஈஜிஆர் சாலையின் சந்திப்பிற்கு அருகே சாலையின் நடுவில் இரும்பாலான மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பமானது சாலையின் நடுவில் இருப்பதால், ஏதேனும் பெரும் விபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்ச நிலை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊருக்குள் திரும்பும் வாகனங்களோ அல்லது ஊருக்குள் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வாகனங்களோ இந்த சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை கடந்தே செல்ல வேண்டி நிலை உள்ளது. இந்த மின்கம்பம் அமைந்துள்ள பகுதியின் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, பஸ் நிறுத்தம் மற்றும் ரேசன் கடை,சந்தை கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், குடி தண்ணீர் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

ஏதோ ஒரு நிலையில் மின் கம்பத்தில் ஏதேனும் வாகனங்கள் தெரியாமல் மோதி விட்டால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து உயிர் சேதம், பொருட்சேதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பாகவே ரோட்டின் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைத்திட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சாலையின் நடுவே இடையூறாக மின் கம்பம் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Tirupalaikudi East Coast Road ,Palangottai ,Tirupalaikudi ,Stand ,Dinakaran ,
× RELATED மிளகாய் உலர் களம் வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்