×

ஒட்டன்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 26: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல், மாதாந்திர பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள் சங்கீதா, சகுந்தலா, ஒன்றிய துணை தலைவர் காயத்திரிதேவி தர்மராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) காமராஜ், மேலாளர் வடிவேல்முருகன், ஒன்றிய பொறியாளர் விஜயராகவன், கணக்காளர் ஜெகதீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிச்சாமி, செல்வி, ஜென்சி, தனலட்சுமி, ராசியப்பன், சுமித்ரா, செல்வி, ராமசாமி, மகமாயி, நாச்சிமுத்து, யாகவன், முத்து, பிரகாஷ் ,சண்முகம், கண்மணி, சின்னத்தாய் ,ரேவதி, ராமராஜ், செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post ஒட்டன்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Othanchatram Union Councilors ,Chief Minister of ,Tamil Nadu ,Otanchatram ,Otanchatram Panchayat Union Councilor ,Union President ,Ayyammal ,Chief Minister ,M.K.Stalin ,Minister of Rural Development ,
× RELATED நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை...