×

அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு ராமேஸ்வரம் தீவு சுற்றுலா பகுதிகள் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்

சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் பதிலளித்து பேசிய பின்பு வெளியிட்ட அறிவிப்புகள்: ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்படும். தமிழக கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.1 கோடியில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்்ள ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபடப் புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4கோடியில் மேம்படுத்தப்படும்.

The post அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு ராமேஸ்வரம் தீவு சுற்றுலா பகுதிகள் ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mathivanthan ,Rameshwaram Island ,Legislative Assembly ,MLA ,Mathivandan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை விவகாரத்தில் நீதிமன்ற...