×

ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டம் நாட்டிலேய தமிழகத்தில் மட்டும் செயல்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சங்கரன் கோவில் ஈ.ராஜா (திமுக) கேட்ட கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:

ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டத்தால், நோயாளிகளின் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும். இத் திட்டத்தின்மூலம் முழு ரத்தக் கூறுகள் எண்ணிக்கை போன்ற அடிப்படை பரிசோதனைகள் முதல் மேம்பட்ட பரிசோதனைகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.150 முதல் ரூ.3000 வரை செலவிடப்படுகின்றன. இத்தகைய திட்டத்தை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம் என்பது பெருமைக்குரியதாகும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

The post ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை திட்டம்’ இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,M. Subramanian ,M. Subra Manian ,Sankaran Kovil E.Raja ,DMK ,Minister of People's Welfare ,M.Subramanian ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...