×

லயன்ஸ் சங்க கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 26: திருச்செங்கோடு லயன்ஸ் சங்க சிறப்பு கூட்டம் தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சிவநேசன் வரவேற்றார். பொருளாளர் வெங்கடாசலம் வரவு -செலவு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அரிமா கவர்னர் தமிழ்மணி கலந்துகொண்டு சங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் விருதுகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மண்டல தலைவர் சண்முக வடிவேல், சேவைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேல், மாவட்ட தூதுவர் கருத்தண்ணன், பொன் கோவிந்தராசு, தீபம் குணசேகரன் ஆகியோர் பேசினர். பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

The post லயன்ஸ் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Lions Club ,Tiruchengode ,Tiruchengode Lions Association ,President ,Kaliappan ,Sivanesan ,Treasurer ,Venkatachalam ,Arima Governor Tamilmani ,Lions Association ,Dinakaran ,
× RELATED லயன்ஸ் கிளப் சார்பில் மரக்கன்று நடும் விழா