×

நர்சிங் மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை, ஜூன் 26: ஊத்தங்கரை அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண், நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவரை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். அதில் சாமல்பள்ளத்தை சேர்ந்த கார்த்திக் (26) கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நர்சிங் மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Ambedkar ,Uthankarai Government Hospital ,Dinakaran ,
× RELATED லாரி டிரைவர் தொழிலாளி திடீர் மாயம்