×

3ம் கட்ட கலந்தாய்வு

காரிமங்கலம், ஜூன் 26: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில், 2024-25ம் ஆண்டிற்கான 3ம் கட்ட கலந்தாய்வு நாளை (27ம் தேதி) நடக்கிறது. பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு, புள்ளியல் மற்றும் பிசிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிகாம், பிபிஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. கல்லூரியில் சேர விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 3ம் கட்ட கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : KARIMANGALAM ,SCIENCES COLLEGE ,DHARMAPURI DISTRICT ,Dinakaran ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை