×

முதியவர், தொழிலாளி தற்கொலை

ஸ்பிக்நகர், ஜூன் 26: முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(70). நேற்று காலை இவரது மனைவி. தூத்துக்குடியில் உள்ள சாக்கு கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள இலந்தப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் சேவகன் மகன் சுதாகர் (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாபாரதி (25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதியினர் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சுதாகர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர், தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : SPIGNAGAR ,Marimuthu ,Krishnanagar 2nd Street, Muthiyapuram ,Sack Company ,Thoothukudi ,Muthiyapuram… ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே மளிகை கடைக்காரருக்கு சரமாரி வெட்டு