×

அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள்

சென்னை: பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதில் அளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:

* சிறுபான்மையினர் மகளிர்க்கு 2500 மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் வழங்கப்படும்.

* நலவாரியத்தில் பதிவுபெற்ற உலமாக்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ. 1000ல் இருந்து 1200ஆக உயர்த்தப்படும். மூக்கு கண்ணாடி உதவித்தொகை 500ல் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும்.

* கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தியும் மற்றும் உறுப்பினர்களின் குடும்பத்தைச் சார்ந்த 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.1000 கல்வி உதவி தொகையும் வழங்கப்படும்.

* உலமாக்கள் மற்றும் உபதேசியார்களுக்கு நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இணையவழியில் செயல்படுத்த தனி மென்பொருள் மற்றும் வலைத்தளம் ரூ.25 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

* கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவிகள் விடுதிக்கு ரூ.3.96 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதி ரூ.56 லட்சத்தில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Senji Mastan ,CHENNAI ,Minority Welfare Department ,Dinakaran ,
× RELATED உடல்களை பெறுவதற்காக கொச்சி செல்கிறேன்: செஞ்சி மஸ்தான்