×

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை:1998ம் ஆண்டு ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார். இத் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

The post 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Balakrishna Reddy ,Supreme Court ,Chennai ,minister ,Hosur ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...