×

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் கைது பயத்தில் தலைமறைவு: போராட்டத்தை ரத்து செய்த கட்சியினர்

கரூர்: கரூர் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், எனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் எனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரவு பதிவு செய்துள்ளனர் என போலீசில் புகார் செய்திருந்தார்.

கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதரும், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலி தொடர்பாக அதிமுக சார்பில் 24ம் தேதி மாவட்ட மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால், கரூர் மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள காரணத்தால் கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை கட்சியினர் ரத்து செய்து விட்டனர்.

விஜயபாஸ்கர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன் ஜாமீன் மனு தள்ளுபடி: கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம்தேதி விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post ரூ.100 கோடி நில மோசடி வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் கைது பயத்தில் தலைமறைவு: போராட்டத்தை ரத்து செய்த கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : Majhi minister ,Karur ,Prakash ,Karur Vangal Kupchipalaya ,minister ,Vijayabaskar ,Dinakaran ,
× RELATED முன்ஜாமீன் மனு தள்ளுபடி; அதிமுக மாஜி...