×

முதல்வருக்கு நன்றி தெரிவித்து நா.கார்த்திக் அறிக்கை

கோவை, ஜூன் 26: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை ஏற்று, கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலத்தில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், கோவையில் அறிவியல் மேதை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு-வுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை அமைக்கவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

கோவை, ஜூன் 26: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி 26வது வார்டில் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதை 4 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றி வழங்க வேண்டும். வார்டு முழுவதும் சாக்கடை கால்வாயை சுத்தம்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சூயஸ் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய் பதிக்க, தோண்டப்பட்ட குழிகள் 6 மாதமாக அப்படியே கிடக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். குடிநீரில், சாக்கடை கழிவுநீர் கலப்பதை அடியோடு தடுக்க வேண்டும். வார்டு முழுவதும் தேவையான அளவு பணியாளர்களை கொண்டு குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும். செங்காளியப்பன் நகரில் பாதாள சாக்கடை பணி தொடங்கி 5 மாதம் ஆகிறது. ஆனால், இன்னும் தொட்டி கட்டும் பணிகூட நடக்கவில்லை. இதை விரைவுபடுத்த வேண்டும். குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post முதல்வருக்கு நன்றி தெரிவித்து நா.கார்த்திக் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Karthik ,Goa ,Secretary General ,Goa Municipal District UN ,Tamil Nadu ,Chief Minister ,MLA K. ,Stalin ,Minister of ,Youth Welfare ,and Sport ,Development Department ,Assistant Minister ,Stahl ,Dinakaran ,
× RELATED காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!